close
Choose your channels

இயக்குனருக்கு கார், இசையமைப்பாளருக்கு தங்க செயின். சூர்யாவின் தாராளம்

Saturday, January 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, அமலாபால், பிந்துமாதவி நடித்த 'பசங்க 2' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் பாண்டியராஜூக்கு நடிகர் சூர்யா கார் ஒன்றை பரிசாக அளித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த அரோல் கரோலியும் சூர்யாவிடம் இருந்து தற்போது பரிசு பெற்றுள்ளார்.

ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை அசர வைத்த இசையமைப்பாளர் அரோல் கரோலி, 'பசங்க 2' படத்திற்கு அருமையான பாடல்களையும் அற்புதமான பின்னணி இசையையும் அமைத்து அனைவரின் நன்மதிப்பை பெற்றார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு இந்த படத்தின் தயாரிப்பாளரான சூர்யா தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அரோல் கரோலியுடனான உறவு நீண்ட காலத்திற்கு தொடரும் என்றும் சூர்யா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.