close
Choose your channels

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஹாலிவுட் வில்லன்?

Monday, November 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'கொடி' வெற்றிப்படமாக உருவாகியுள்ள நிலையில் தற்போது அவர் 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்தும் 'பவர்பாண்டி' என்ற படத்தை இயக்கியும் வருகிறார். மேலும் செளந்தர்யா ரஜினியின் அடுத்த படத்திலும், கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் -கார்த்திக் சுப்புராஜ் முதன்முதலாக இணையவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது என்பதை கடந்த சிலநாட்களுக்கு முன் பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் வேடத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் Al Pacino நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.