close
Choose your channels

சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் சூர்யா?

Monday, March 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'மகாநதி' என்ற பெயரில் உருவாகவிருக்கின்றது என்பதும், இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளார் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் சாவித்திரியின் கணவர் ஜெமினி கணேசன் வேடத்திற்கு பல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது படக்குழுவினர் சூர்யாவிடம் அணுகியிருப்பதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிப்பது குறித்து சூர்யா முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி உறுதியானால் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பின்னர் மீண்டும் சூர்யா-கீர்த்திசுரேஷ் ஜோடி இணையும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம் உருவாகி வருவதால் தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள சூர்யா இந்த படத்தில் இணைந்தால் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை நாக்-அஸ்வின் இயக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.