close
Choose your channels

'சூர்யா 41' படத்தின் அட்டகாசமான டைட்டில் இதுதான்: அதிரடி அறிவிப்பு!

Monday, July 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சூர்யா நடித்து வரும் 41வது படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாகர்கோவில் அருகே நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் ’சூர்யா 41’ படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு ’வணங்கான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் டைட்டில் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மீனவர்கள் பிரச்சினை குறித்து அலசும் இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு கேரக்டர் மாற்றுத்திறனாளி கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் தயாராகி வரும் ’வணங்கான்’ திரைப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.