close
Choose your channels

'லியோ' பிசினஸை முந்தியதா 'சூர்யா 42'? ரிலீஸுக்கு முன்னரே செம வியாபாரம்..!

Wednesday, March 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே ரூபாய் 400 கோடி பிசினஸ் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ’லியோ’ பிஸினஸை முந்திய வகையில் ’சூர்யா 42’ படத்தின் பிசினஸ் இதுவரை ரூ.,500 கோடி அளவில் ஆகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் பட குழுவினர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யா 13 கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும், தமிழ் உள்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் 3டி டெக்னாலஜியில் உருவாகி இருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ’சூர்யா 42' படத்தின் பிசினஸ் ரூபாய் 500 கோடியை தாண்டிவிட்டது என்று கூறப்படுகிறது. சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவை சேர்ந்து ரூபாய் 500 கோடி பிசினஸ் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.