close
Choose your channels

ஏண்டா உயிரோடு இருக்கோம்ன்னு நினைப்பே! 'காப்பான்' 2வது டிரைலர்

Saturday, September 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டிரைலருக்கு பின் இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற உந்துதல் பலரது மனதில் எழுந்திருக்கும் என்பது உண்மை.

ஆபத்து என்று தெரிந்தால் புல்லட்டை முன்னாடி நின்னு நெஞ்சில வாங்கணும் அதான் எழுதப்படாத சட்டம், ‘நம்ம போலீஸ் தண்ணீர் பந்தலும் வைக்கும் தேவைப்பட்டால் நெருப்பும் வைக்கும்’, ‘ஒருநாள் உன்னை உயிரோட பிடிப்பேன் அப்ப.. ஏண்டா உயிரோட இருக்கோம்ன்னு நீ நினைப்பே..’ போன்ற அதிரடி வசனங்களே இந்த படத்தின் கதையை கிட்டத்தட்ட உறுதி செய்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் சூர்யாவின் அதிரடி ஆக்சன் உள்ளது. மேலும் ஆர்யாவின் வில்லத்தனம், சாயிஷாவின் அழகு, ஹாரீஸ் ஜெயராஜின் ஆக்ரோஷமான பின்னணி இசை, பிரதமர் கேரக்டராகவே வாழ்ந்துள்ள மோகன்லால் என படம் முழுவதும் பாசிட்டிவ் அம்சங்கள் இருப்பது இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஆக்சன் பட ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும் என கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.