close
Choose your channels

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' சென்சார் தகவல்கள்

Tuesday, January 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு UA'  சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டதை அடுத்து இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக இருக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.