close
Choose your channels

'ஜெய்பீம்' படத்தை ட்ரோல் செய்த எச்.ராஜா: சூர்யா என்ன செய்தார் தெரியுமா?

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் நேற்று அமேசான் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்தை பார்த்து கொண்டாடாத நபர்களே இல்லை என்று கூறலாம். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜக பிரமுகர் எச் ராஜா அவர்கள் ’ஜெய்பீம்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்திருப்பதாவது: நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம். என்று பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் தனது திரைப்படத்தை விமர்சனம் செய்த எச் ராஜாவின் டுவிட்டுக்கு நடிகர் சூர்யா லைக் செய்துள்ளார். தன்னை கடுமையாக விமர்சனம் செய்தவரையும் லைக் செய்த சூர்யாவின் செயலை ’மேன்மக்கள் மேன்மக்கள்’ என தான் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.