close
Choose your channels

பெரிய பட்ஜெட் படத்தை இயக்கும் சுசீந்திரன்: 7வது முறையாக இணையும் பிரபலம்!

Tuesday, January 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சுசீந்திரன் இதுவரை மீடியம் பட்ஜெட்டில் படங்களை இயக்கி வந்த நிலையில் பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவருடன் ஏழாவது முறையாக பிரபலம் ஒருவரும் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். அதன்பின் ‘நான் மகான் அல்ல’ ’பாண்டியநாடு’ ’ஜீவா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார் என்பதும், சமீபத்தில் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’ஏஞ்சலினா’ ’சிவசிவா’ ஆகிய படங்களை இயக்கி வரும் சுசீந்திரன், நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படம் பெரிய பட்ஜெட் படம் என்றும் அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மே 1ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் ஒரு பிரபல நடிகர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் அனைத்து விவரங்களும் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் சுசீந்திரன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் டி இமான் இசையமைக்க இருப்பதாகவும் டி இமான் அவர்களுடன் தான் ஏழாவது முறையாக இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் ஆகிய ஆறு படங்களில் சுசீந்திரன் மற்றும் டி இமான் பணிபுரிந்த நிலையில் தற்போது இருவரும் 7வது முறையாக இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos