close
Choose your channels

மீண்டும் படம் இயக்கும் டி.ராஜேந்தர், பிக்பாஸ் நடிகை தான் ஹீரோயின்

Thursday, May 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு அவதாரங்களில் புகழ் பெற்றவர்களில் மிகச்சிலரில் ஒருவர் டி.ராஜேந்தர். அஷ்டவாதானி ராஜேந்தர் என்று அழைக்கப்படும் இவர் கடந்த 2007ஆம் ஆண்டு 'வீராச்சாமி' என்ற படத்தை இயக்கினார். அதன்பின்னர் 11 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

அரசியல் நையாண்டியுடன் கூடிய இந்த படத்தை டி.ராஜேந்தர் இயக்குவதுடன் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, ரோபோசங்கர் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான நடிகை நமீதா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும், இந்த படம் தற்போதைய அரசியல் குறித்த படம் என்பதால் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டி.ராஜேந்தர் சமீபத்தில் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.