close
Choose your channels

தலைவாழை இலை, அம்மன் கெட்டப்: தமன்னாவின் அட்டகாசமான புகைப்படம் வைரல்!

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தலைவாழை இலையில் அம்மன் வேடமிட்டு நடிகை தமன்னா உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் அம்மன் வேடத்தில் நடித்து உள்ளனர் என்பதும் கேஆர் விஜயா முதல் நயன்தாரா வரை அம்மன் வேடத்தில் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மன் வேடத்தில் தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ’வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை நான் கடவுளாகவே உணர்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமன்னா அம்மன் படத்தில் நடிக்கிறாரா? அல்லது ஏதாவது விளம்பர படமா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இருப்பினும் இந்த இந்த புகைப்படம் பதிவு செய்து இரண்டு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் நான்கு லட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.