close
Choose your channels

தமிழ் சினிமாவில் பிரமாண்டத்தை அறிமுகம் செய்தவர்: கலைப்புலி எஸ் தாணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Sunday, June 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் தற்போது பல திரைப்படங்கள் பிரம்மாண்டமாக உருவாகி வந்தாலும் பிரம்மாண்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் கலைப்புலி எஸ் தாணு தான் என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரிப்பது மட்டுமின்றி அந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் பிரம்மாண்டத்தை அறிமுகம் செய்தவர் என்பதும் அவரது விளம்பரங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ் தாணு அறிமுகம் செய்த பிரம்மாண்ட விளம்பரத்தை தான் தற்போது அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் கடைப்பிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து அவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான ’பைரவி’ படத்தை பிரமாண்டமாக முதல்முறையாக விளம்பரம் செய்ததும், அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தையும் கலைப்புலி எஸ் தாணு தான் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படத்தை முதல் முறையாக விமானத்தில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்தார் என்பதும் ’கபாலி’ போஸ்டர்கள் உலகம் முழுவதும் விமானத்தில் பறந்து சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தற்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர் பல திரைப்படங்களை விநியோகம் செய்து வருகிறார் என்பதும் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ’மகளிர் மட்டும்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இன்னும் பல வெற்றி படங்களை தயாரித்து நூறாண்டு வாழ வேண்டும் என்று அவரது பிறந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos