close
Choose your channels

கமல், சூர்யாவையும் விட்டு வைக்காத 'தமிழ்ப்படம் 2'

Saturday, July 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல், சூர்யாவையும் விட்டு வைக்காத தமிழ்ப்படம் 2

நடிகர் சிவா இயக்கத்தில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒபாமா முதல் உள்ளூர் அரசியல்வாதிகள் வரை, ரஜினி முதல் முன்னணி நட்சத்திரங்கள் வரை கலாய்க்கப்படும் காட்சிகள் இந்த படத்தில் இருக்கின்றது என்பது வெளிவந்து கொண்டிருக்கும் டீசர், டிரைலர்களில் இருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இன்னொரு டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரில் சூர்யாவின் '24', கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' ஜிவி பிரகாஷின் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படங்கள் உள்பட ஒருசில படங்களின் காட்சிகள் கலாய்க்கப்படுகிறது. இந்த டீசரே படத்தை பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்துவதால் நிச்சயம் இந்த படம் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா, திஷா பாண்டே, சதீஷ், சந்தானபாரதி, ஐஸ்வர்யா மேனன், நிழல்கள் ரவி, மனோபாலா, கஸ்தூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் இசையமைத்துள்ளார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.