close
Choose your channels

வேற லெவலில் சூர்யாவின் பிறந்த நாள்: விக்னேஷ் சிவன்

Monday, July 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வரும் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளிவரும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் 'சூர்யாவின் பிறந்த நாளை 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்குடன் வேற லெவலில் கொண்டாடுவோம்' என்று பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அதே நாளில் ரசிகர்களுக்கு இன்ன்னொரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த சர்ப்ரைஸ் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சூர்யாவுக்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்திசுரேஷ் நடித்து வரும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் செந்தில், சுரேஷ்மேனன், கார்த்திக் ஆகியோர் மிண்டும் ரீஎண்ட்ரி ஆகின்றனர். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.