close
Choose your channels

அஜித்துக்கு வித்தியாசமான விவசாயி வேடம்: விவேக் திட்டம்

Friday, April 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகரான விவேக் சமீபத்தில் சீரியஸான கேரக்டரில் நடித்த 'வெள்ளைப்பூக்கள்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஒரு படத்தை இயக்கும் திட்டம் ஒன்றை விவேக் வைத்துள்ளார். இதுகுறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விவேக் கூறியதவது:

இதுவரை விவசாய படம் என்றாலே சீரியஸ் படமாகவே வந்துள்ளது. என்னிடம் ஒரு காமெடி கலந்த விவசாயம் குறித்த கதை உள்ளது. அந்த படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அஜித் ஒரு முழு நீள காமெடி படத்தில் நடித்து ரொம்ப நாளாகிறது. இந்த படம் முதல் பாதி வரை முழுக்க முழுக்க காமெடியாக சென்று இறுதியில் ஒரு சீரியஸான விஷயத்தை சொல்லும் படம்.

இப்படியும் ஒரு இளைஞன் தமிழ்நாட்டில் வாழ முடியுமா? என்ற அளவுக்கு அந்த கதையின் நாயகன் இருப்பார். விவசாயத்திற்காக தேசமே போற்றும் அளவுக்கு ஒரு இளைஞர் செய்த விஷயம் தான் இந்த படத்தின் முக்கிய அம்சம். இந்த படத்தின் கதையை அஜித்துக்காகவே வைத்துள்ளேன். அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று விவேக கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.