close
Choose your channels

அஜீத்தின் 23-வது வருடம். ரசிகர்கள் கொண்டாட்டம்

Monday, August 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஒரு பக்கம் விஜய்யின் 'புலி' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அஜீத் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். அவர்களுடைய சுறுசுறுப்புக்கு காரணம் இன்றோடு அஜீத் சினிமாவுலகில் காலடி வைத்து 22 வருடங்கள் முடிந்து 23வது வருடம் தொடங்குகிறது என்பதுதான்.

கடந்த 1990ஆம் ஆண்டில் அஜீத் கதாநாயகனாக அறிமுகமான படம் 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்கு படம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 3ஆம் தேதிதான் தொடங்கியது. இதனால் இன்றைய நாள் அஜீத்துக்கு முக்கியத்துவமான நாள் என்பதால் அவருடைய ரசிகர்கள் நூற்றுக்கணக்கான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் படத்தில் பிசியாக உள்ளார். அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.