close
Choose your channels

நட்ராஜ் குழந்தையுடன் விளையாடிய தல தோனி.. க்யூட் வீடியோ வைரல்..!

Saturday, April 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் குழந்தையுடன் தல தோனி விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நேற்று சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த வெற்றியை அடுத்து சென்னை அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் நடராஜன் விளையாட வில்லை என்றாலும் அவர் தனது குடும்பத்துடன் போட்டியை பார்க்க சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார். இந்த நிலையில் போட்டி முடிந்ததும், நடராஜன் குழந்தையுடன் தல தோனி விளையாடிய க்யூட் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் நடராஜனுக்கு தோனி வாழ்த்து தெரிவித்ததோடு அவருடைய குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது குறித்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.