close
Choose your channels

'தளபதி 64' படத்தின் டீம் குறித்த அசத்தலான தகவல்

Thursday, June 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிந்துவிடும் என தெரிகிறது.

இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'தளபதி 64' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ என்பவர் தயாரிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

'தளபதி 64' படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோவை இயக்குனர் லோகேஷ் இன்று தனது டெக்னிக்கல் டீமுடன் சென்று பார்த்து தனது குழுவினர்களை அறிமுகம் செய்துள்ளார். இந்த டீமில் இளம் இசைப்புயல் அனிருத்தும் இருந்ததால் 'தளபதி 64' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் சத்யன்சூரியன் ஒளிப்பதிவில் ஃபிலோமினாஜ் படத்தொகுப்பில் உருவாகவுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.