close
Choose your channels

விஜய்யின் 'தளபதி 66' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

Tuesday, May 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரிப்பில் உருவாகிவரும் ’தளபதி 66’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் வரும் ஜூன் இரண்டாம் தேதி முதல் சென்னையில் ’தளபதி 66’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படப்பிடிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பிற்கான ஆயத்தப்பணிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே இந்த படத்தின் ஒரு பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சென்னையில் இன்னொரு பாடலின் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் தளபதி விஜய் குடும்ப சென்டிமென்ட் கதையில் நடிப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos