close
Choose your channels

'ரெண்டுல ஒண்ணு பாக்கலாம், நிக்கிறியா தெம்பா': பீஸ்ட்' படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல்

Saturday, March 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக்குத்து பாடலின் தாக்கமே இன்னும் சமூக வலைதளங்களில் இருந்து விடுபடாத நிலையில் சற்று முன்னர் இரண்டாவது பாடலான ’ஜாலியானா ஜிம்கானோ’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்யின் குரலில், அனிருத் இசையமைப்பில், கார்த்திக் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் நடனம் ஆடியுள்ளனர் என்பதும் இந்த பாடல் செம கலர்ஃபுல்லாக கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது என்றும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடல் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளது என்று குறிப்பிடப்பட்டது. இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

ரெண்டுல ஒண்ணு பாக்கலாம், நிக்கிறியா தெம்பா
எப்பவும் லைஃப் திரும்பலாம் நம்புறியா நண்பா
யாரு இங்கே வந்தாலும் பயமுறுத்தி பார்த்தாலும்
அசராம சிரிச்சா அவன் ஒதுங்கி போவாண்டா

அத்தனையும் போனாலும் எம்ப்டியாக நின்னாலும்
பதறாம இருந்தா பீஸ்ட்டு நீதாண்டா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.