close
Choose your channels

'தளபதி 66' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Sunday, September 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி விஜய்யின் 66வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தளபதி விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் அடுத்த படத்தை வம்சி இயக்க இருப்பதும், தில் ராஜ் தயாரிக்க இருப்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படம் குறித்த அறிவிப்புடன் வம்சி மற்றும் தில் ராஜு ஆகியோர்களுடன் தளபதி விஜய் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தளபதி விஜயின் 66வது திரைப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.