close
Choose your channels

'பீஸ்ட்' ரிலீஸ் தேதி மாறுகிறதா?

Saturday, February 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பு வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்து உள்ளன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அதே ஏப்ரல் 14 அன்று பான் இந்தியா திரைப்படமான யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் வெளியாவதால் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 என சமூக வலைதளங்களில் ஒரு சிலர் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி திட்டமிட்டபடி ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்றும் ரிலீஸ் தேதியை உறுதி செய்யும் வகையில் ’பீஸ்ட்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் தளபதி விஜய்யை வெள்ளித் திரையில் பார்க்க ரசிகர்கள் தயாராகலாம் என்பதே உண்மையாகும் .

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் நெல்சன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.