close
Choose your channels

சென்னையில் 'சர்தார்'  படப்பிடிப்பு: நாயகி பகிர்ந்த மாஸ் புகைப்படம்!

Saturday, February 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி நடித்து வரும் ’சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த படப்பிடிப்பில் கார்த்தி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை படப்பிடிப்பில் தான் கலந்துகொண்டதாக இந்த படத்தின் நாயகி ராஷிகண்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் ஷூட்டிங்ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இறுதியில் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.