close
Choose your channels

'தளபதி 63' படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த தகவல்

Tuesday, February 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறவிருப்பதாகவும் அதன்பின் படக்குழுவினர் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய், கால்பந்தாட்ட பயிற்சியாளர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி விஜய் கேரக்டர் பெயர் 'மைக்கேல்' என்றும், இந்த கேரக்டர் வடசென்னை மீனவ குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தது என்றும் கூறப்படுகிறது.

விஜய், நயன்தாரா, படத்தில் பரியேறும் பெருமாள்' கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வாண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.