close
Choose your channels

ஆடியோ லாஞ்சுக்கு பிள்ளையார் சுழி போட்ட எம்ஜிஆர்: எந்த ஹீரோ படம் தெரியுமா?

Wednesday, April 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் ஆடியோ லான்ச் என்ற டிரெண்டை தொடங்கி வைத்த பிரபல நடிகர் குறித்த தகவல்கள் தற்போது பார்ப்போம். 

தமிழ் சினிமாவில் ஆடியோ லான்ச் என்பது கடந்த சில ஆண்டுகளாகத்தான் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னர் 100 நாள் ஓடிய உடன் வெற்றிவிழா மட்டுமே கொண்டாடப்படும்.

இந்த நிலையில் நடிகர் தியாகராஜன் நடித்து இயக்கிய திரைப்படமான ’பூவுக்குள் பூகம்பம்’ என்ற திரைப்படத்தில் தான் முதல் முதலாக ஆடியோ லான்ச் பிரம்மாண்டமான விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் கலந்துகொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து தான் தமிழ் சினிமாவில் ஆடியோ லான்ச் என்ற விழா அடிக்கடி கொண்டாடப்பட்டது என்பதும் தற்போது அந்த விழா ஒரு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஆடியோ லான்ச் என்ற டிரெண்டை எம்ஜிஆர் மூலம் ஆரம்பித்தவர் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் என்ற தகவல் இன்றைய சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.