தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கும் தேதி இதுவா?
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதி அளித்தது என்பதும் 50 சதவீத இருக்கைகளுடன் மாஸ்க் அணிந்த பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது இருப்பினும் தமிழக அரசு திரையரங்குகள் திறப்பது குறித்த எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்ததால் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
அக்டோபர் 30ஆம் தேதி சூர்யாவின் ‘சூரரை போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.