close
Choose your channels

'தெறி'யுடன் கனெக்ஷன் ஆன சிவகார்த்திகேயனின் 'ரெமோ'

Saturday, March 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் ஆகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றில் 'டப் தெறி ஸ்டெப்' என்ற பாடலும் ஈனா மீனா டீக்கா' என்ற பாடலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த பாடல்களை எழுதிய பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜூக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.


இந்நிலையில் இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்தில் அவருக்கு நண்பராக அருண்ராஜா காமராஜ் நடித்து வருகிறாராம். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே' படத்திலும் அவருக்கு நண்பராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களுக்கு மட்டுமின்றி உண்மையிலேயே அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயனுக்கு பல ஆண்டுகளாக நண்பராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.