close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட்: கமல்ஹாசனுக்கு பதில் இந்த பிரபல நடிகரா?

Tuesday, February 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது என்பதும் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் தற்போது வெளியேறி உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு உடன் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விலகி கொள்வதாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து கமல்ஹாசனுக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நடிகர் சிம்பு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை வார இறுதி நாட்களில் தொகுத்து வழங்குவார் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு, கமல்ஹாசன் அளவுக்கு தொகுத்து வழங்குவாரா? அவரது பாணி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.