close
Choose your channels

'தளபதி 69' படத்தின் நாயகி இந்த 4 நடிகைகளில் ஒருவரா? லேடி சூப்பர் ஸ்டார் மிஸ் ஆகுதே?

Sunday, April 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் தான் இயக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் தற்போது கசிந்து வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் நாயகி கேரக்டர் வலிமையானது என்றும் அதனால் பிரபல நடிகை தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

’தளபதி 69’ படத்தில் நாயகியாக தமிழ் நடிகைகள் த்ரிஷா மற்றும் சமந்தா, பாலிவுட் நடிகைகள் ஆலியா பட் மற்றும் மிருணாள் தாகூர் ஆகிய நால்வரில் ஒருவர் தான் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் 4 பேரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

த்ரிஷா ஏற்கனவே விஜய்யின் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் அவர் ’லியோ’ படத்தில் நடித்தது மட்டுமின்றி ‘கோட்’ படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். சமந்தாவும் விஜய்யின் ‘தெறி’ ‘மெர்சல்’ மற்றும் ‘கத்தி’ படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆலியா பட், மிருணாள் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டால் விஜய் உடன் முதன்முறையாக நடிக்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த பட்டியலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பரிசீலனையில் கூட இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் 69 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் முன்பே நாயகிகள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருவது முழுக்க முழுக்க வதந்தியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.