close
Choose your channels

இந்த வார ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஒரு பார்வை

Wednesday, February 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் ஐந்து முதல் பத்து படங்கள் வரை ரிலீஸ் ஆகி வரும் நிலையில் அதற்கு இணையாக ஓடிடியிலும் படங்கள் ரிலீஸ் ஆகி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் 11 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

விலங்கு: விமல் நடித்த முதல் வெப் தொடரான ’விலங்கு’ இந்த வாரம் ஜி5 ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இந்த தொடரின் ட்ரெய்லர் மற்றும் டீசர் ஏற்கனவே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது

இரை: சரத்குமார் நடிப்பில் உருவான இரை என்ற திரைப்படம் இன்று ஆஹா ஓடிடியில் ரிலீஸாகிறது. ஏற்கனவே இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது

எனிமி: விஷால் மற்றும் ஆர்யா நடித்த இந்த திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது

இறுதிப்பக்கம்: மனோ வி கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு த்ரில்லர் படம் என்பதும், அமேசான் பிரைமில் நாளை வெளியாகவுள்ளது.

மேலும் பங்காராஜூ என்ற தெலுங்கு திரைப்படம் ஜீ5 ஓடிடியிலும், ‘ஏ தர்ஸ்டே’ என்ற ஹிந்தி படம் ஹாட்ஸ்டாரிலும், ’த்ரிஷ்யா 2’ என்ற கன்னட திரைப்படம் ஜீ 5 ஓடிடியிலும், ’வலிமை’ நாயகி ஹூமா குரேஷி நடித்த ‘மித்யா’ என்ற தெலுங்கு திரைபடம் அமேசான் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. மேலும் ‘மேப்படியான்’ என்ற மலையாள திரைப்படமும், பேமிலிபேக் என்ற கன்னட திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.