close
Choose your channels

'சர்கார்' படத்துடன் வெளியாகும் சூப்பர் ஸ்டார்களின் படம்

Wednesday, September 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தீபாவளி தினத்தில் தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதே தினத்தில் வேறு சில திரைப்படங்களும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய சூப்பர் ஸ்டார்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள 'தக் ஆஃப் ஹிந்தோஸ்தான்' என்ற திரைப்படம் தமிழில் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புரமோஷன் வீடியோ ஒன்றில் அமிதாப்பச்சன் மற்றும் அமிர்கான் ஆகிய இருவரும் தமிழில் இந்த படம் குறித்து பேசியுள்ளனர்.

அமிதாப்பச்சன், அமீர்கான், காத்ரினா கைப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.210 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.