close
Choose your channels

ஜிபி முத்து பிக்பாஸ் போட்டியாளரா? வைரல் புகைப்படம்!

Friday, September 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக் டாக் மூலம் நகைச்சுவையான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சின் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து, அதன்பின் டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் யூடியூபில் பிரபலமடைந்தார். இவர் தற்போது சன்னி லியோன் ஜோடியாக ’ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டின் முன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனி, சுனிதா, தர்ஷா மற்றும் ஷகிலாவின் மகள் மிளா, ஆர்ஜே வினோத், சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி உள்பட சிலரது பெயர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.