close
Choose your channels

த்ரிஷாவின் ''பரமபதம் விளையாட்டு' சென்சார் தகவல்கள்

Saturday, September 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா தற்போது சுமார் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் த்ரிஷா நடித்த ’‘பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும், சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் த்ரிஷா நடித்திருப்பது மட்டுமின்றி அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார். எனவே இந்த படம் அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷாவுடன் ரிச்சர்டு, நந்தா, ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர். 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.