close
Choose your channels

மெக்சிகோவில் 'செனோரிட்டா': த்ரிஷாவின் லேட்டஸ்ட் வீடியோ!

Wednesday, March 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2000ம் ஆண்டு ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா அறிமுகமானார். அதன்பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், உள்பட முன்னணி நடிகர்களுடன் கடந்த இருபது ஆண்டுகளில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் ’பொன்னியின் செல்வன்’ உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் த்ரிஷாவுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் வீடியோக்கள் புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மெக்சிகோவில் இருக்கும் த்ரிஷா, அங்கிருந்து பதிவு செய்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ‘எல்லோரும் என்னை செனோரிட்டா’ என்று அழைக்கின்றார்கள்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.