close
Choose your channels

அஜித், விஜய் பட இயக்குனருடன் இணைந்த த்ரிஷா!

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'ஆசை' மற்றும் விஜய்-சூர்யா இணைந்து நடித்த 'நேருக்கு நேர்' உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் வசந்த். இவர் கடந்த ஆண்டு 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் வசந்த் ஒரு விளம்பர படத்தை இயக்கி வருகிறார். இந்த விளம்பரப்படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கின்றார். இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பின்போது இருவரும் இணைந்து எடுத்து கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை த்ரிஷா தற்போது 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', 'பரமபத விளையாட்டு', 'ராங்கி' போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.