close
Choose your channels

டிவி சீரியல் நடிகரால் 4 முறை கர்ப்பமாகி, அபார்ஷன் செய்த டீச்சர்: போலீசில் புகார்

Thursday, July 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிவி சீரியல் நடிகர் ஒருவரால் டீச்சர் ஒருவர் நான்கு முறை கர்ப்பமாகியதாகவும், நான்கு முறையும் அபார்ஷன் செய்து கொண்டதாகவும், இதனையடுத்து சீரியல் நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த 30 வயது டீச்சர் ஒருவரை, 52 வயது டிவி சீரியல் நடிகர் ரகு என்பவர் நெருக்கத்துடன் பழகி உள்ளார். தன்னுடைய மனைவி இறந்து விட்டதாகவும் தனக்கு அன்பு பாசம் கிடைக்காமல் ஏங்கி வருவதாகவும் டீச்சரிடம் உருக்கமாகப் பேசி அவரை மயக்கி உள்ளார். அதுமட்டுமின்றி டீச்சரை டிவி சீரியலில் நடிக்க வைக்கிறேன் என்று ஆசைகாட்டி உள்ளார்.

இந்த நிலையில் இருவரும் நெருங்கி பழகியதால் நான்கு முறை கர்ப்பமானதாகவும் நான்கு முறையும் அபார்ஷன் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டீச்சரின் இரண்டு சவரன் தங்கச்சங்கிலியையும், டூவீலரையும் எடுத்து விட்டு ரகு மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து டீச்சர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து ரகுவை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் இருந்து பைக்கையும் தங்க செயினை மட்டும் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், ஆனால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிகிறது.

இந்த நிலையில் தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று டீச்சர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அடுத்து நீதிமன்றம் டீச்சரின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் டீச்சர் தன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று டீச்சரை ரகு மிரட்டி வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.