close
Choose your channels

'தலைவர் 169' படத்தில் இணையும் இரண்டு பிரபல ஹீரோக்கள்?

Sunday, February 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்க போகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நெல்சன் இயக்கும் அனைத்து படங்களிலும் பாடல்கள் எழுதும் சிவகார்த்திகேயன், இந்த படத்தில் பாடல் எழுதுவதோடு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது தனது மிகப்பெரிய கனவு என ஏற்கனவே பல பேட்டிகளில் சிவகார்த்திகேயன் கூறியிருந்த நிலையில் அந்த கனவு தற்போது நனவாகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் நெல்சனின் இன்னொரு நெருங்கிய நண்பரான சிம்பு இந்த படத்தில் ஒரு பாடல் எழுதி பாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ’தலைவர் 169’ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு ஆகிய இரண்டு பிரபல ஹீரோக்கள் இணைய உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.