close
Choose your channels

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள்!

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை நடிகை திரிஷா பெற்றள்ளார். இதனால் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் நடிகை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு மற்றும் சினிமா துறையில் சிறந்து விளங்குவோர் எனப் பலரும் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பித்து வருகின்றனர். இப்படி விசா பெறும் பிரபலங்கள் 10 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் குடிமகன்களாகவே கருதப்படுவர்.

மேலும் பாதுகாப்பு சோதனைகளும் எளிமையாக்கப்பட்டு அடிக்கடி ஐக்கிய அமீரகம் செல்வதற்கு இந்த விசா உதவுகிறது. பாலிவுட் சினிமாவில் சஞ்சய் தத், ஷாருக்கான், போனி கபூர், அர்ஜுன் கபூர் மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், பிருத்விராஜ் சுகுமாரன் எனப் பலரும் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். சமீபத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடாலிவிற்கும் மலையாள மற்றும் தமிழ் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு இந்த கோல்டன் விசா கிடைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிக்கட்டி பறந்துவரும் நடிகை திரிஷா கோல்டன் விசாவை பெற்றுள்ளார். இதுகுறித்து, “அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்“ என்று நடிகை திரிஷா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.