close
Choose your channels

உதயநிதி ஸ்டாலினின் 'கெத்து' படத்தின் சென்சார் விபரங்கள்

Friday, January 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்துள்ள 'கெத்து' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் தயாரிப்பாளரும் இந்த படத்தின் நாயகனுமான உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் முதன்முதலாக உதயநிதி ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார். சத்யராஜ், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த் வில்லனாக நடித்துள்ளார். திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இவருக்கு இன்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.