close
Choose your channels

பரட்டை,சப்பாணியை விரட்டியடிப்பார் இளையதளபதி: திமுக எம்.எல்.ஏ

Wednesday, September 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக அரசுக்கு எதிராக நேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ சுதர்சனம், 'பரட்டையையும் சப்பாணியையும், அதிமுக அரசையும் நமது இளையதளபதி விரட்டியடிப்பார் என்று பேசினார். இந்த இடத்தில் இளையதளபதி என்பது உதயநிதியை குறிப்பிட்டதால் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் கைதட்டினர். அதேபோல் பரட்டை, சப்பாணி என்று யாரை குறிப்பிடுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'இப்போது கரன்சி நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கும் அதிமுக அமைச்சர்கள் விரைவில் ஜெயில் கம்பிகளை எண்ணுவார்கள்' என்று பேசினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்பது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.