close
Choose your channels

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரிலீஸ் எப்போது?

Monday, June 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படமான ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது

மைசூர் அரண்மனை, லண்டன் உள்பட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே அடுத்த கட்டமாக படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் ஆவலுடன் உள்ளனர். இந்த படத்தை அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை சுராஜ் இயக்கி உள்ளார். இந்த படம் வடிவேலுவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.