close
Choose your channels

அஜித்தின் 'வலிமை' படத்தின் மூன்று நாள் திட்டம்

Saturday, December 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று முடிந்தது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தற்போது சென்னை திரும்பியுள்ள ‘வலிமை’ படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்

‘வலிமை’ படத்தின் 3 நாள் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ரேகா கார்டன் என்ற பகுதியில் நடைபெறுவதாகவும் இதில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படப்பிடிப்பை அடுத்து சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஒரு நீண்ட படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

அஜித் நடிப்பில், எச்.வி்னோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இந்த படம் அதிரடி ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.