close
Choose your channels

'வந்தான் சுட்டான் ரிப்பிட்டு': பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டில்!

Thursday, April 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டில் ’மாநாடு’ திரைப்படத்தின் மாஸ் வசனமான, ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ என வைக்கப்பட்டுள்ளது

சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ ’தில்லுக்கு துட்டு2’ ஆகிய படங்களையும், சமீபத்தில் வெளியான சிவாவின் ’இடியட்’ திரைப்படத்தின் இயக்குனருமான ராம்பாலா தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு தான் அவர் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ என்ற டைட்டில் வைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக சற்றுமுன் வெளியாகியுள்ள போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரமெளலி, மீனாட்சி கோவிந்தராஜன், ரெபா மோனிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கின்றார். சேவிலோராஜா ஒளிப்பதிவில், வெங்கட்ரமணன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ரகுநாதன் தயாரிக்கின்றார்.

இந்த படத்தின் போஸ்டரை பார்க்கும்போது இதுவும் ஒரு திகில் மர்மம் கலந்து பேய்ப்படம் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.