close
Choose your channels

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட 'சர்கார்' பட நடிகை!

Friday, March 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் என்பதும் இந்த பாடலின் வரிகளுக்கு உள்ள அர்த்தமே தெரியாமல் வெளிநாட்டவர்கள் பலர் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டார்கள் என்பது தெரிந்ததே. மேலும் இந்த பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களையும் தாண்டி ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்யின் தீவிர ரசிகையும், விஜய் நடித்த ’சர்க்கார்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான வரலட்சுமி சரத்குமார் இந்த பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டபோது அந்த திருமண நிகழ்ச்சியில் மணமகனுடன் சேர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போட்டார். விஜய் போலவே மணமகன் ஆட, அவருடன் வரலட்சுமி செம ஆட்டம் போட்ட வீடியோவை விஜய்யின் ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.