close
Choose your channels

'வேதாளம்': அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியீடு

Wednesday, October 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்களின் வியாழக்கிழமை செண்டிமெண்ட்படி, இந்த படம் நவம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 29ஆம் தேதி அதாவது நாளை டிரைலரும், நவம்பர் 10ஆம் தேதி அதாவது தீபாவளி தினத்தில் படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக இன்று வெளியான போஸ்டர் தெரிவிக்கின்றது. இதன்மூலம் இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், ராகுல்தேவ், சூரி, தம்பிராமையா, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.