close
Choose your channels

வெங்கட்பிரபுவின் அடுத்த 2 படங்கள் குறித்த முக்கிய தகவல்

Wednesday, September 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ள 'சென்னை 600028' படத்தின் 2ஆம் பாகம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் கதை வசனம் எழுத வெங்கட்பிரபு திரைக்கதை எழுதி ஒரு படத்தை இயக்கவுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
மேலும் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாகவும், இந்த படத்தை 'சென்னை 600028' பட நாயகன் சிவா இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. வெங்கட்பிரபுவின் இந்த இரண்டு படங்கள் குறித்த அறிவிப்புகள் மிகவிரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.