close
Choose your channels

வெங்கட்பிரபுவின் 'சென்னை 600028 II' படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீடு தேதி

Saturday, October 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2007ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் முதல் படமான 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னை 600028 II' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வரும் 7ஆம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் மிக பிரமாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்,சிவா, பிரேம்ஜி, நிதின்சத்யா, விஜய் வசந்த், விஜயலட்சுமி, வைபவ் ரெட்டி, மகத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பும் செய்துள்ளனர். வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி' இந்த படத்தை தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.