close
Choose your channels

'வெண்ணிலா கபடி குழு' நடிகர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

Saturday, December 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ’வெண்ணிலா கபடி குழு’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரியுடன் சேர்ந்து காமெடி வேடத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஹரி வைரவன் உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு காலமானதாக அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஹரி வைரவன் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு திரையுலகினர் நிதி உதவி செய்து உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஹரி பைரவன் இறுதிச்சடங்கு இன்று மதுரையில் நடைபெறும் என்று இதில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.