close
Choose your channels

நீச்சல் உடையில் கூட நயன்தாரா அழகாக இருப்பார்: சொன்ன கவர்ச்சி நடிகை யார் தெரியுமா?

Saturday, September 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீச்சல் உடையில் கூட நயன்தாரா அழகாக இருப்பார் என்றும் ஆனால் சிலர் உடல் முழுவதும் உடை அணிந்து வந்தால் கூட கேவலமாக இருப்பார்கள் என்றும் பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மூத்தமகள் டிஸ்கோ சாந்தி என்பதும் இவர் கடந்த 80 மற்றும் 90களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல், ரஜினி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களுக்கு இவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். குறிப்பாக சில்க் ஸ்மிதா உடன் இணைந்து ஒரு சில படங்களில் நடனம் ஆடினார். மேலும் சில்க் ஸ்மிதா தயாரித்த சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் டிஸ்கோ சாந்தி கூறியபோது, ‘உடை என்பது எந்த வகையிலும் ஒரு நடிகையை தவறான கண்ணோட்டத்தில் காட்டாது என்றும் குறிப்பாக ’பில்லா’ படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் கூட அழகாக இருப்பார் என்றும் அவரை வக்கிரமான எண்ணத்தோடு பார்த்தால் கூட முகம் சுழிக்கும் அளவிற்கு அந்த கவர்ச்சி இருக்காது என்றும் கூறினார்.

ஆனால் ஒரு சிலர் உடல் முழுவதுமாக ஆடைகளால் போர்த்திக்கொண்டு வந்தால் கூட அந்த உடை டைட்டாக இருக்கும்போது பார்ப்பதற்கு கேவலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.