close
Choose your channels

'தல 56' படத்தில் இணையும் 'புலி' நடிகை

Monday, September 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விஜய்யின் 'புலி' படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்போது புதிதாக இந்த படத்தில் இணைந்துள்ளார். 'புலி' படத்தில் சித்திரக்குள்ளியாக நகைச்சுவை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படும் வித்யூலேகா ராமன், தல 56' படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வித்யூலேகா ராமன் கூறியதாவது, "'தல 56' படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் பிளாஷ்பேக்கில் வரும் ஒரு காட்சியில் நடிக்கின்றேன். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் தல-தளபதி நடித்த 'வீரம்' மற்றும் 'ஜில்லா'வில் நடித்த வித்யூலேகா தற்போது மீண்டும் 'தல 56' மற்றும் 'புலி' படங்களில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வித்யூலேகா மேலும் தக்கார், பஞ்சுமிட்டாய், மீண்டும் ஒரு காதல் கதை, மாப்ளே சிங்கம், தண்ணி வண்டி, ஆகிய தமிழ் படங்களிலும் ஒருசில தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.